முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா வங்கியில் ரூ.6 கோடி நகை கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - கர்நாடகாவில் உள்ள வங்கி சுவரில் துளை போட்டு ரூ . 6 கோடி நகை, பணம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
கர்நாடக மாநிலம் ஹரிசாவே கிராமத்தில் காவேரி கிராமப்புற வங்கி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் நகைக்கடன் பெற்றுள்ளனர். அந்த நகைகள் வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் வங்கியின் சுவரில் துளை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 2,500 பவுன் தங்க நகைகள், ரூ. 1 5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதன் மதிப்பு ரூ. 6 கோடி. கொள்ளை கும்பல் வங்கிக்குள் நுழைந்ததும் அங்குள்ள சிசிடிவி கேமிரா இணைப்பு பதிவாகும் டிஜிட்டல் ரெக்கார்டர் இணைப்பையும் துண்டித்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே ராமபுரத்தில் பொதுத்துறை வங்கியில் சமீபத்தில்  6  ஆயிரம்  பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வங்கியிலும் சுவரில் துளை போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கும், கர்நாடகாவில் நடந்துள்ள வங்கி கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வங்கி கொள்ளை சம்பவங்களால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து