முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பனிப்புயலால் மக்கள் பெரும் பாதிப்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பாஸ்டன் - அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சியை தொடர்ந்து, பாஸ்டன், நியூ இங்கிலாந்து ஆகிய பகுதிகளிலும் பனி புயல் தாக்கி வருகிறது. இதனால் 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். அப்பகுதி முழுவதும் 3 அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பனிமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில், சாலைகள், கார்கள் மற்றும் வீடுகளை சுற்றி 6 அடிக்கு அதிகமாக பனிக்கட்டிகள் மூடியுள்ளன. இந்த பனி புயல் பாஸ்டன் நியூ இங்கிலாந்தின் கிழக்கு பகுதி மற்றும் நான் துங்கட் தீவு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வீசியது. இதனால் பாஸ்டனில் உள்ள அல்லோகன் விமானநிலையத்தில் 23.3 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் மூடியுள்ளன. இதனால் அங்கு விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் தொடர்ந்து பனி புயல் மற்றும் மழை தாக்கி வருவதால், இங்குள்ள பல்வேறு பகுதிகளில் 6 அடி உயரத்துக்கு பனிக்கட்டிகல் சூழ்ந்துள்ளன. வீடுகள், கார்கள் மற்றும் சாலைகளில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு உள்ளன. இதனால் 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தற்போது சாலைகள் மற்றும் கார்களில் மூடியுள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாசசூசெட்ஸ் மாகாண கவர்னர் சார்லி பேக்கர் கூறினார்.

நியூயார்க்கில், இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மெட்ரோ ரயில் தண்டவாளங்களை மூடியிருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. நேற்று முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. இதன்மூலம் மக்கள் அலுவலகங்களுக்கு சென்றுவர முடியும். சாலைகளில் மூடியுள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. அவை இன்றுக்குள் அகற்றப்படும். அதன்பிறகு சாலை போக்குவரத்தும் நடைபெறும் என்று நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாண கவர்னர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து பெய்து வரும் பனி புயல் மற்றும் மழையினால்  மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு கிடைக்காமல் கடந்த 2 நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து