முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் அதிபர் விரைவில் இந்தியா வருகை

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் - சிங்கப்பூர் அதிபர் டான் கெய் யாம் விரைவில் இந்தியா வருகை தரவுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் லூய் டக் யூ தெரிவித்தார்.
 
சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
சிங்கப்பூர் அதிபர் டான் கெய் யாம், இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அப்போது அவர் இந்திய தலைவர்களை சந்திக்க உள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவருடைய பயணம் அமையும். 50 ஆண்டுகளுக்கு முன்பு 1965ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் விடுதலை பெற்ற போது எங்கள் நாட்டுடன் உறவை முதலில் வளர்த்து கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணிசேரா நாடுகள் அமைப்பில் சிங்கப்பூர் இணைவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு நிலவுகிறது. முக்கியமாக உயர்மட்ட அளவிலான உறவு வலுப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் சிங்கப்பூர் முக்கிய பங்களிப்பை ஆற்றும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து