முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி ஓபன்: செரீனா இறுதிப்போட்டிக்கு தகுதி

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீ ராங்கனைகள் மரியா ஷரபோவா - மகரோவா மோதினார்கள்.

இரண்டாம் வரிசையில் இருப்பவரும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2008ம் ஆண்டு கைப்பற்றியவருமான ஷரபோவா 6-3, 6- 3 என்ற நேர்செட்  கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 10ம் நிலை வீராங்கனையான மகரோவா 2வது முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதியில் தோற்றுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் அரை இறு தியில் தோல்வியை தழுவி இருந்தார். ஷரபோவா 4 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு அரை இறுதியில் நம்பர் 1 வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 7- 6, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த மேடிசன் கெய்சை வீழ்த்தினார். அவர் 6வது முறையாக  இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.

இறுதி போட்டியில் செரீனா - ஷரபோவா மோதுகிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரை இறுதியில் 6ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே - தாமஸ் பெர்டிச் மோதினர். பெர்டிச் கால் இறுதியில் நடாலை வீழ்த்தி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து