முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக அமெரிக்கர்களுக்கான கட்சி: லல்லு பிரசாத்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

கவுகாத்தி - பாஜக அமெரிக்கர்களுக்கான கட்சி. அவர்கள் தயவால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது என்று லல்லு பிரசாத்  யாதவ் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மத சகிப்பு தன்மை குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து அசாம் முதல்வர் தருண் கோகோய் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
 
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பயணத்தின் போது மத சகிப்பு தன்மையின் அவசியத்தை வலியுறுத்தி இருப்பதன் மூலம் பிரதமர் மோடியின் ஆட்சியில் மத சகிப்பு தன்மை குறைந்து வருவதை அவர் எடுத்துக்காட்டியுள்ளார் என்று கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் பாட்னாவில் நடைபெற்ர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லல்லு பிரசாத் யாதவ் கூறுகையில், மத ரீதியிலான பிரிவினையின் மூலம் நாடு தற்போது கடுமையான  நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நன்றிகள். அவர் மூலமாக மோடியின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

பாஜக அமெரிக்கர்களுக்கான கட்சி. அவர்களின் தயவால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. ஒபாமா இந்தியாவுக்கு வரும் போது மோடியும், அமைச்சர்களும் விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்கின்றனர். ஆனால் இந்திய அமைச்சர்கள் அமெரிக்காவுக்கு சென்றால் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றார் லல்லு.
 
மாயாவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் பாஜகவின் குணம் மாறவில்லை. இது குறித்து  நாட்டு மக்கள் இதுவரை கவலைப்பட்டு வந்தனர். இப்போது உலக நாடுகளும் கவலைப்பட ஆரம்பித்து விட்டன என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து