முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லீக் ஆட்டம்: இங்கிலாந்தை அபாரமாக வென்றது ஆஸ்திரேலியா

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது. அந்த அணி அபாரமான பின்ச் சதம் மற்றும் மேக்ஸ்வெல், பெய்லி, அரைசதங்களுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
 
ஏரோன் பின்ச்சிற்கு முதல் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் மிஸ் ஆனது. விளைவு ஏரோன் ஃபின்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 135 ரன்கள் விளாசினார். பின்ச் கேட்சை விட்ட பிறகு சிறப்பாக ஆடியது போல் கடைசியில் 66 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

பின்ச் எடுத்த 135 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 5-வது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். வார்னருடன் 57 ரன்கள் தொடக்கம் கண்ட பின்ச் பிறகு பெய்லியும் இவரும் இணைந்து 146 ரன்களைச் சேர்த்து 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை கொண்டு சென்றனர். ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை எடுத்தது.
 
அதன் பிறகு மேக்ஸ்வெல் வழக்கமான பாணியில் நகர்ந்து கொண்டு ஆடுவது, மேலேறி வந்து ஆடுவது என்று அடிக்கத் தொடங்கினார். 42-இல் இவருக்கும் ஒரு வாழ்வு வழங்கியது இங்கிலாந்து ஆனால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசியில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்களை 11 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் ஹாட்ரிக் விக்கெட்டுகளில் ஒன்றானார். மிட்ச்ல் மார்ஷ் விரைவு 23 ரன்களையும் பிராட் ஹேடின் 14 பந்துகளில் 31 ரன்களையும் விளாசியதில் கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை ஆஸி.விளாச ஸ்கோர் 342 ரன்களை எட்டியது.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து ஆட்டம் முழுதும் தடுமாறி கடைசியில்  41.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் சற்றும் எதிர்பாராத விதமாக இங்கிலாந்தை திணறச் செய்து 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

மொயீன் அலி 5-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய ஷாட் பந்தில் புல் ஆட முயன்று 10 ரன்களில் மிட் ஆனில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து 10 ரன்களில் கேரி பாலன்ஸ்  மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை பிளிக் செய்தார். ஆனால் தரையில் ஆடாமல் காற்றில் ஆட ஷாட் மிட்விக்கெட்டில் ஃபின்ச்சிடம் கேட்ச் ஆனார்.

36 ரன்களுடன் ஆடி வந்த இயன் பெல், மிட்செல் மார்ஷ் பந்தை ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார். அதற்கு அடுத்த பந்தே ஜோ ரூட் அவுட் ஆனார். மீண்டும் ஷாட் பந்து, ஜோ ரூட் ஷாட்டிற்குச் சென்று டாப் எட்ஜ் செய்ய ஹேடின் கேட்ச் பிடித்தார். கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர அவர் 6 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், மிட்செல் மார்ஷ் வீசிய பந்துக்கு ஹேடினின் அற்புதமான தாழ்வான கேட்சால் அவுட் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து