முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் மாதந்தோறும் முடி ஏலம்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்தவர் ஜெயலலிதா: கவர்னர் ரோசய்யா பாராட்டு
சென்னை - மக்களவை தேர்தல் மற்றும், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழக மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அளித்திருக்கிறார்கள் என்று தமிழக கவர்னர் ரோசய்யா தனது உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்..
தளராத முயற்சி, மனோதிடம், அயராத போராட்டங்களால் நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்தவர் ஜெயலலிதா என்று சட்டசபையில்  கவர்னர் ரோசய்யா மனம் திறந்து பாராட்டினார்.

தமிழக கவர்னர் ரோசய்யா  நேற்று சட்டசபையில் உரை நிகழ்த்திய போது கூறியதாவது:-

பதினான்காவது சட்டமன்றப் பேரவையில் தொடர்ந்து நான்காவது முறையாக தொடக்க உரையாற்றும் அரிய வாய்ப்பு பெற்றதை, நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளமும் 2015-ம் ஆண்டிலும் தொடர்ந்து பெருக வேண்டும் என விரும்புகிறேன்.

முழுமையான வளர்ச்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த அரசின் மீது, தாம் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்.மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில் நமது மாநிலத்தின் சட்டப்பூர்வ  உரிமைகளை பாதுகாப்பதில், தளரா முயற்சிகளையும் அயரா போராட்டங்களையும்  மேற்கொண்ட  ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத்  தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 

அவரது தொடர் முயற்சி மற்றும் மனோதிடத்தால்  மட்டுமே, முல்லைப் பெரியாறு அணை, நீரியல் அடிப்படையிலும், கட்டுமான  அடிப்படையிலும், நிலநடுக்க சாத்தியக்கூறு அடிப்படையிலும், பாதுகாப்பாக  உள்ளது என உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை  நமது மாநிலம் பெற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்த  முடிந்தது.  சட்டப்பூர்வமான அனுமதிக்கப்பட்ட அளவாகிய 142 அடி உயரத்திற்கு  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து, தென்மாவட்ட  மக்களுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி  கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை  அமைப்பதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய  வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது  கடும் எதிர்ப்பை இந்த அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதுபோன்றே, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப  வடிநிலப் பகுதியில் புதிய நீர்தேக்கத் திட்டங்களைச் செயல்படுத்த  உத்தேசித்துள்ள கேரள அரசின் நடவடிக்கை குறித்த தமிழகத்தின் நியாயமான  கவலைகளும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இத்தகைய எந்த ஒரு புதிய  திட்டமும் காவேரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலையும், பாசன உரிமை பெற்ற  அனைத்து மாநிலங்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். மேகதாதுவில் புதிய அணை
குடிநீர்த் தேவை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது  என்ற இடத்திற்கு அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளைக்  கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த புதிய திட்டத்தை கர்நாடக  அரசு செயல்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் ஓர் இடைக்கால மனுவை தமிழ்நாடு அரசு  தாக்கல் செய்துள்ளது.  மேலும், ஒரு நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பாக  காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரையில் காவேரி ஆற்றின் குறுக்கே  இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய வனம் மற்றும்  சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கக்கூடாது என மத்திய அரசை இந்த அரசு  வலியுறுத்தியுள்ளது.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை  செவ்வனே செயல்படுத்திட காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நீர்  முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள்  எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  மாநிலங்களுக்கு இடையிலான  நதிநீர்ப் பிரச்சினைகள் இந்தியாவின் இறையாண்மைக்கே ஊறு விளைவிப்பதாக உள்ளன.   தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தீபகற்ப நதிகளை  இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக  அமைந்து தேசிய ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து