முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 லட்சம் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக  தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 43 ஆயிரம் மையங்களில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதற்கட்ட தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/சத்துணவு
மையங்கள்/பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.

2 லட்சம் அரசு மற்றும் தனியார்த்துறையை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000 வாகனங்களில்  நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களுக்கு ரூ 9.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற்ற 6 லட்சத்து 63ஆயிரத்து 976 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. ஆயிரத்து 327 மையங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில் 7 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாமில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து