முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ரெயில்வே துறையில் ‘அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயம், புதிய பென்சன் திட்டம் போன்ற தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் நேற்று 16 தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. எஸ்.ஆர்.இ.எஸ்., டி.ஆர்.இ.யு.. உள்ளிட்ட சங்க தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் இதில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம், ஜானகிராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், ராமதாஸ், காளிமுத்தன், ஆர்.மோகன், பி.சேகர், பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பேசினார்கள்.இதையடுத்து அடுத்தக் கட்டமாக ஏப்ரல் 28–ந்தேதி டெல்லியை நோக்கி பேரணி மற்றும் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சூரியபிரகாசம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து