முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்: வெங்கையா மன்னிப்பு கேட்டார்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றம் நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டினார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

உடனே வெங்கையா நாயுடு எழுந்து மறுப்பு தெரிவித்தார். சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தை எதையும் குறிப்பிடவில்லை. யாரையும் புண்படுத்தி பேசவும் இல்லை. எனது பேச்சை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. என்றாலும் நான் சொன்னது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்ததால் சபையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு குறித்து பிரச்சினையை கிளப்பியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மேல்சபை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து