முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வசதிபடைத்தவர்களுக்கு எரிவாயு மானியம் நிறுத்தப்படும்

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - வசதிபடைத்தவர்களுக்கு எரிவாயு மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அவர் மேலும் கூறியதாவது,

இதற்கு முன்பு வரைமுறையில்லாமல் மானியங்களை வழங்கியிருக்கிறார்கள். மானியங்களை முறையாக வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக, வசதியானவர்களுக்கு எரிவாயு மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும். 11.5 கோடி பேர் எரிவாயு மானியம் பெற்றுள்ளனர். அந்தளவிற்கு நேரிடி மானிய திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 80 ஆயிரம் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 2022ல் நாம் பணக்கார நாடு என்ற நிலையை அடைவோம். விவசாயிகளுக்கு மண்வளத்தை தெரிவிக்க அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

தேசிய அளவில் சந்தைகள் ஏற்படுத்தப்படும். நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி கடன் தரப்படும். நுண் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 8.5 லட்சம் கோடி இலக்கு. சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க முத்ரா வங்கி ஏற்படுத்தப்படும். இதில் படித்த இளைஞர்கள் தொழிலதிபர்களாக வர முடியும். தபால் நிலையங்கள் வங்கிகளாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாட்டில் பல பேருக்கு காப்பீடு இல்லை. ஜங்தங் திட்டம் மூலம் அது கிடைக்கும். வருடத்திற்கு 12 ரூபாய் என்ற பிரீமியத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படும்.

100 நாள் திட்டத்திற்கு ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற மேம்பாட்டிற்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கு இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியும், பழங்குடியினருக்கு ரூ. 17 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும். ரூ. 8.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்படும். வரியில்லா அடிப்படை கட்டமைப்பு பண்டுகள் அறிமுகப்படுத்தப்படும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

10.5 கோடி மூத்த குடிமக்களுக்கு நல நிதி திட்டம் செயல்படுத்தப்படும். அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அடல் பென்சன் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு பென்சன் வழங்கப்படும். நபார்டு வங்கிக்கு 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு லட்சம் கோடி முதலீடு பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து