முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை: சோனியா

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மத்திய பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு சொல்லும்படி அதில் ஒன்றும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ள நிலையில் முன்னேற்றம் தரும் பட்ஜெட் இது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட். நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்த கூடிய வகையில் புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவிக்கையில், இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து