முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தலா ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை வீதம் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

இது குறித்து பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது,

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தரமான மருத்துவ சேவை வழங்கும் வகையில் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஆந்திரா மற்றும் காஷ்மீரில் ஐ.ஐ.எம்.கள் அமைக்கப்படும். கர்நாடகத்தில் தன்பத் கல்லூரி ஐ.ஐ.டி.யாக தரம் உயர்த்தப்படும். மாணவர்கள் இடைநிற்றலின்றி தங்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி, மதிய உணவுக்கு 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகார், மேற்கு வங்கத்திற்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து