முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காஷ்மீர் முதல்வர் முப்தியின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.

மக்களவை நேற்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் கூடியது. ஆந்திர மாநில திருத்த மசோதா உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஷ்மீரில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முப்தி முகமது சயீத், தோர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், பிரிவினைவாதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. முப்தி பேச்சுக்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், முப்தி பேச்சுக்கும், மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் ஆணையம், ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்பு படையினர் மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு காரணமாகவே தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. அவர்களுக்கு எனது நன்றி என்றார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. முப்தி பேச்சு குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் முப்தியின் பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து