முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டார் நிதீஷ்குமார்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - தேர்தல் தோல்வி நெருக்கடியில் பதவி விலகியதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று நிதீஷ்குமார் கூறினார்.
பீகாரில் முதல்வராக இருந்த நிதீஷ்குமார் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பு ஏற்று பதவி விலகினார். தனது ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கினார்.

அவர் தன்னிச்சையாக செயல்பட்டதால் நிதீஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க கட்சி முடிவு செய்தது. ஆனால் மாஞ்சி பதவி விலக மறுத்ததுடன் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து பதவியில் நீடிக்க முடிவு செய்தார். ஆனாலும் போதிய ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்தார். அதன் பிறகு நிதீஷ்குமார் முதல்வரானார்.

கடும் போராட்டத்துக்கு பின்புதான் அவர் முதல்வர் பதவியை பிடிக்க முடிந்தது. அது அவரை மிகவும் பாதிப்படைய செய்துன விட்டது. இதையடுத்து நிதீஷ்குமார் தனது தவறை உணர்ந்து விட்டது தெரியவந்தது. பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய நிதீஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாணியில் தொண்டர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

பீகாரில் பாராளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நான் பதவி விலகினேன். ஆனால் பதவி விலகியது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதற்காக பீகார் மாநில மக்களிடமும், கட்சி தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நான் உறுதி கூறுகிறேன். கட்சி தொண்டர்களாகிய நீங்கள் மக்களை சந்தித்து எனது கருத்தை எடுத்து சொல்ல வேண்டும். சிலரால் நான் வில்லன் போல் மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து