முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இன்று 10 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் இன்று 10 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் இன்று  காலை 7 மணிக்கு நடக்கிறது.

  அதிமுக பொதுச்செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாளை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் ,அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாளான 24 ம் தேதி அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டி 10 ஆயிரம் பெண்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பால்குட ஊர்வலம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தி,பரவசத்துடன் பக்தர்கள் பறவைகாவடி,மயில்காவடி, உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வைகை ஆற்றிலிருந்து மேலமாசி வீதி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கு சர்வ,சமய வழிபாடுகளும் நடைபெற்றது.
 
இந்நிலையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரம் இன்று  4ம் தேதி புதன் கிழமை) வருகிறது.இதையொட்டி அவர் நீடூழி வாழவேண்டியும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும் விரைவில் வரவேண்டியும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து தெய்வத்தை வழிபடும் நிகழ்ச்சி இன்று  புதன்கிழமை காலை 7 மணியளவில் நடக்கிறது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபட்டால் அவர்கள் மனதில் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். அதைப்போல பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையான கேரள வெண்பட்டு சேலை அணிந்து இன்று மதுரை தெப்பக்குளம் மாரியம்மனுக்கு 10 ஆயிரம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டுமென வழிபாடு செய்கிறார்கள்.

இந்த வழிபாட்டிற்கு முன்னதாக பெண்கள் திரண்டு பொங்கல் வைத்த பின்பு ஊர்வலமாக பொங்கலை எடுத்து ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு வைத்துபடைத்து வேண்டுதல் நடத்துகிறார்கள். இந்த ஊர்வலம் காலை 9மணிக்கு தொடங்குகிறது. ஊர்வலத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட யானைகள்,குதிரைகள்,சென்டை மேளம் முழங்க அணிவகுத்து பெண்கள் செல்கிறார்கள். ஊர்வலத்தில் 25 க்கும் மேற்பட்ட முத்துகுடைகள் பிடித்து தொண்டர்கள் செல்கிறார்கள்.

இந்த பொங்கல் வழிபாடு மற்றும் ஊர்வல நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெரும்திரளாக  கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் அதிவிமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆளும் தமிழக மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் பிறந்த மகம் நட்சத்திரம் இன்று  4ம்தேதி வருகிறது.

அன்றைய தினம் மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் நீண்ட ஆயுலோடு தமிழக மக்களை பாதுகாக்க மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக விரைவில் வரவேண்டியும் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் மேயர், இந்நாள்,முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,துணை மேயர், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி,தொகுதி,வட்டம், பாக கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள்,கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்,பிரதிநிதிகள்,கழகத்தின் மூத்த முன்னோடிகள்,செயல்வீரர் மற்றும் வீராங்கணைகள்,கழகத்தின் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து