முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்பயா ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிர்பயா ஆவணப்படத்தை வெளிநாடுகளில் ஒளிபரப்பியது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை லெஸ்லி உட்வின் என்ற பெண் இயக்குநர் தயாரித்துள்ளார். வரும் 8ம் தேதி மகளிர் தினத்தையொட்டி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆவணப்படத்தில் பலாத்கார சம்பவம் தொடர்பாக தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவரின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது.

அந்த ஆவணப்படத்தில் அந்த குற்றவாளி தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு கடும் நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பிபிசி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பி விட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க யூடியூப்பில் இருந்து இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து