முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக தொண்டரின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சாலைவிபத்தில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அதிமுக தொண்டரின் மருத்துவச்செலவுக்காக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இந்த தொகையை அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் வளர்மதி, மற்றும் கோகுல இந்திரா ஆகியோர், காயமடைந்த கந்தனின் மனைவியை சந்தித்து நேரில் வழங்கினர்.

இது குறித்து வெளியிடப்பட்ட அதிமுக செய்திக்குறிப்பு:
 
தென் சென்னை வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி, 100-ஆவது வட்டக் கழகச் செயலாளர் கந்தன் சாலையில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர், `மக்களின் முதல்வருமான ஜெயலலிதா மிகுந்த துயரமுற்றதோடு, தமது சார்பாக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்து, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் 50,000/- ரூபாய் வழங்குமாறு ஆணையிட்டிருந்தார்.
 
அதன் அடிப்படையில் அதிமுக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா. வளர்மதி, அதிமுக அமைப்புச் செயலாளரும், மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினரும், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சருமான எஸ். கோகுல இந்திரா, தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.பி.கலைராஜன், எம்.எல்.ஏ., அண்ணாநகர் பகுதிக் கழகச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 8-ஆவது மண்டலக் குழுத் தலைவருமான . வெங்கடேசன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிக் கழகச் செயலாளர் . அப்துல்கரீம் (எ) ஏ.மு. பாபு, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் . அமீர்பாஷா உள்ளிட்டோர், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தனை , அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா சார்பாக நேரில் பார்த்ததோடு, அவருடைய மனைவியும், சென்னை மாநகராட்சி 100-ஆவது வார்டு
மாமன்ற உறுப்பினருமான மு. மல்லிகாவுக்கு ஆறுதல் கூறி, கந்தனின் மருத்துவ சிகிச்சைக்காக 50,000/- ரூபாயை வழங்கி, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
 
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் தாயுள்ளத்தைக் கண்டு, மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியினை பெற்றுக் கொண்ட மல்லிகா மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து