முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா

வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

மதுரை - உலகக் கோப்பைகளில் இதுவரை 7-வது முறை அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. இதற்கு முன்னர் விளையாடிய 6 அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது 6 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அதில் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2 முறை இரண்டாவது இடத்தை பெற்றது. சர்வ வல்லமையும் படைத்த அணியாகத் திகழும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் மீண்டும் ஒரு கோப்பையை வெல்லும் வேகத்துடன் அரை இறுதிக்கு வந்துள்ளது.

ஆனால் இந்தியாவின் சவால் அதற்கு கடுமையாக இருக்கும் ஏன் என்றால் அந்த அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தொர்ந்து வெற்றிகளை பெற்று பேட்டிங், பவுலிங்கிலும் சிற்பபாக விளையாடி வருகிறது.
1975ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலியா 2வது இடத்தைப் பிடித்தது.
1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் முதல் சுற்றுடன் அது வெளியேறியது.

1987ம் ஆண்டு அது முதலாவது கோப்பையை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை பறை சாட்டியது.
ஆனால் 1992ம் ஆண்டு நடந்த போட்டியின்போது 5வது இடத்தைப் பெற்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
1996ம் ஆண்டு இரண்டாவது இடம் கிடைத்தது. 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வல்லமையின் உச்சம் தொடங்கியது.

1999 முதல் 2003, 2007 என 3 முறை உலகக் கோப்பையை தொடர்ந்து வென்று தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டியது ஆஸ்திரேலியா. 2011ல் இந்தியாவில் நடந்த போட்டியின்போது காலிறுதியோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. அந்த ஆண்டு கோப்பையை இந்தியா வென்றது. 2015ல் அரை இறுதிக்கு வந்து சேர்ந்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த முறை சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் கோப்பைக் கனவு சற்று கூடுதலாகவே உள்ளது. அது கை கூடுமா அல்லது இந்தியாவிடம் மண்ணைக் கவ்வுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து