முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பந்தல்கள் சென்னை முழுவதும் அதிமுகவினர் திறந்தனர்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அன்பு வேண்டுகோள் வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், .அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நீர்-மோர் பந்தல்களை திறந்து, சுகாதார முறைப்படியும், அன்போடும், பரிவோடும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கி விட்டதால், .அ.தி.மு.க. தொண்டர்கள், தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மக்கள் முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் உடனடியாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை திறந்து மக்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். குடிநீர் மற்றும் நீர் மோர் அல்லாமல், தர்பூசணி, வெள்ளரி, இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றையும் கழகத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சென்னை சைதாபேட்டை அரங்கநாதன் பாலம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். , கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தல்களை, அமைச்சர் திருமதி. பா. வளர்மதி திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், பழங்கள், மோர் போன்றவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழன், தொகுதி செயலாளர் மனோகர், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி, கவுன்சிலர் வச்சலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள முத்தையா முதலி தெரு மற்றும் வள்ளூவர் கோட்டம் அருகிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். இதில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன், கவுன்சிலர் சிவராஜ் வட்டசெயலாளர்கள் பச்சையப்பன், பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

சென்னை ராயபுரம் எஸ்.என் செட்டித்தெருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் இரா.பழனி,கார்த்திகேயன்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து