முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவிலிருந்து 230 பேர் வெளியேறத் தடை

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

கான்பெரா - இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பில் இணையக் கூடும் என்ற சந்தேகத்தின் கீழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற 230 பேருக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பதின்மை வயதைச் சேர்ந்த 3 பேரும் இதில் அடங்குவர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக துருக்கி மூலம் சிரியா செல்ல முயன்ற இரு சகோதரர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்களை, காவல் துறையினர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 100 முதல் 250 ஆஸ்திரேலியர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இந்த 230 பேருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து