முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதேரா விவகாரம் எதிரொலி: ராகுல் வருகை மேலும் தாமதமாகும்!

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் தொடக்கத்தில் திடீரென தலைமறைவானார். பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் அரசியல் பணியில் இருந்து விடுமுறை எடுத்துள்ளதாக சோனியா அறிவித்தார். ஆனால் கட்சியில் தனக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமித்து முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற ராகுல் அதற்கு மூத்த தலைவர்கள் தடையாக இருந்ததால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த விஷயத்தில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே சோனியா காந்தி தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் போராட்டங்களில் கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகைக்கு 14 கட்சி தலைவர்களுடன் சென்று நிலஎடுப்பு சட்டத்திற்கு எதிராக மனு கொடுத்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த மாத இறுதியில் டெல்லி திரும்புகிறார் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ராகுல் வருகை மீண்டும் தாமதமாகி உள்ளது. அவர் மேலும் 2 வாரம் கழித்துத்தான் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா பற்றிய தணிக்கை குழு அறிக்கை தான் என்று தெரியவந்துள்ளது. நில விற்பனையில் வதேராவுக்கு சலுகை காட்டியதால் அரியானா அரசுக்கு ரூ. 41 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு கூறியுள்ளது.

இந்த செய்தி நேற்று காலையில் வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராகுல் நாடு திரும்புவதை தள்ளி போட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் டெல்லி எண்களை தனது பிளாக்பெரி செல்போன் மூலம் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளார். பிளாக்பெரி மூலம் குறுந்தகவல் அனுப்புகிறார். வாட்ஸ்அப் மூலமும் தகவல்களை பரிமாறிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து