முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிமிடத்துக்கு 10 பைசா வரை செல்போன் கட்டணம் உயருகிறது

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 10 பைசா வரை தொலைதொடர்பு நிறுவனங்கள் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொலைதொடர்புக்கான ஸ்பெக்ட்ரம் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 109 கோடி லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்தது இல்லை.தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரீமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

19 நாட்களாக 115 சுற்றுக்களாக நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோபோன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்ட காரணத்தால் அவற்றின் ஒட்டுமொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31ம் தேதிக்குள் பணத்தை கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டியதுள்ளது. அடுத்தகட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையை குறைக்க செல்போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்தால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே செல்போன் கட்டணத்தை கடுமையாக உயர்த்த கூடாது என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக உயர்த்த கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதை பொறுத்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous March 29, 07:27

    பி எஸ் ஏன் எல் நல்ல சேவை தந்தால் யாரும் இந்த தனியார் சேவையை விரும்பமாட்டார்கள் .இந்த பி எஸ் ஏன் எல் நல்ல சேவையை தராமல் மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள் தனியாரிடம் செல்ல .

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து