முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு 5வது இடம்

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

நியூயார்க் - நிர்வாகம், தொழில் மற்றும் கொடை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை அமெரிக்க நாளேடான பார்ச்சூன், வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5-வது இடத்திலும், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, 28வது இடத்திலும் உள்ளனர்.

2015ம் ஆண்டின் மிகப் பெரிய தலைவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள, 50 தலைவர்களைக் கொண்ட அந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா பெயர் இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல்மைச் செயல் அதிகாரி டிம் குக் முதலாவது இடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி 2வது இடத்திலும் உள்ளனர். சீன அதிபர் ஜீ ஜின்பிங் 3வது இடத்தையும், போப் 4-வது இடத்தையும், இந்திய பிரதமர் மோடி 5வது இடத்தை பெற்றுள்ளனர்.

முகநூல் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க் 25வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியல் குறித்து பார்ச்சூன் பத்திரிக்கை கூறியுள்ளதாவது:

இந்தியாவை தொழிலுக்கு சாதகமான நாடாக மாற்றுவதிலும், மகளிருக்கு எதிரான வன்முறைகளை எதிர்நோக்குவதிலும் உறுதியான நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். தடைகளை கண்டறிந்து, தன்னால் முடிந்த இடங்களில் அவற்றைக் களைவதற்கு அவர் முயற்சிக்கிறார். கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, மலாலாவுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டதால் கைலாஷ் சத்யார்த்தியின் புகழ் மறைக்கப்பட்டுவிட்டது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக சர்வதேச அளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் போராடி வருகிறார் என்பது பார்ச்சூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து