முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில கையகப்படுத்தலுக்காக புது அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - நிலம் கையகப்படுத்தலுக்காக புது அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,

இப்போதைய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் வரும் 6ம் தேதி காலாவதியாகிறது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே அந்த அவையின் பட்ஜெட் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய அவசரச் சட்டம் பிறப்பிக்க பாஜக அரசு சதி செய்கிறது.

உத்தேச புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. இதுபற்றிய விவரம் தெரிந்தால்தான் எங்கள் தரப்பு நிலையை தெரிவிக்க இயலும். இந்த மசோதாவை தற்போதைய வடிவில் ஆதரிக்க முடியாது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். எங்கள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படும் சந்தேகங்கள், அச்சங்களுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை செய்தால் மட்டுமே ஆதரிப்போம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து