முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு: வரும் 10 ந்தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பென்சன் குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 10 ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்துதொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை சென்ற பிப்ரவரி மாதம் 11 ந்தேதி நடைபெற்றது. சென்ற பிப்ரவரி 11 ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மார்ச் -2 ந்தேதி தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதற்கிடையே 12, மற்றும் 20 தேதிகளில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.இதைத்தொடர்ந்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டை போக்குவரத்து பணிமனையில் நேற்று நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி.மா.ராசு உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்களின் 84 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை விபரங்கள் குறித்து அண்ணாதொழிற்சங்க பேரவை தலைவர் தாடி.மா..ராசு நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது. நிலுவைத்தொகையுடன் வழங்கப்படும் அம்மா பென்சன் திட்டத்தை தொழிலாளர்கள் ஆர்வத்தோடு எதிர்ப்பார்க்கின்றனர். இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் 21 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 50 விழுக்காடு ஊதிய உயர்வு வலியுறுத்தப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் பழைய பென்சனை மீண்டும் அமுல்படுத்தவும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 10 ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து