முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 12.7 இலட்சம் குடும்ப நல அறுவை சிகிக்சைகள்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12.7 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக வும்
மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக அரசு குடும்ப நலத்துறை சார்பில் குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்,
தலைமையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் இவ்விழாவில் கலந்து கொண்டு 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் வகிக்கும் மருத்துவமனைகள்
மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு கேடயங்கள் மற்றும் சான்றிதடிநகளை வழங்கி விழாப் பேசினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது,

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு முன்னோடித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு மற்றும் நோய் சிகிச்சை என்ற இரு சேவைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் மத்திய அரசு, உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் போன்ற அமைப்புகள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து பார்வையிட வருகை தரும் குழுவினர் என அனைவரும் பாராட்டுகின்றனர். அண்மையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்கள் பாராளுமன்றத்தில்
பேசும்பொழுது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எனப் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சராசரியாக 6 இலட்சம் வெளி-நோயாளிகள் மற்றும் 85 ஆயிரம் உள்-நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சுமார் ஒரு இலட்சத்திற்கு மேலான பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றுகின்றனர். 2006-07 முதல் 2010-11 முடிந்த ஐந்து ஆண்டுகளில் சுகாதாரத்துறைக்கு
ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு 14257.46 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அதாவது 2011-12 முதல் 2015-16 வரையிலான காலத்திற்கு ஒதுக்கிய மொத்த நிதி ஒதுக்கீடு 32091.17 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆட்சிகாலத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையான ரூபாய் 14257.46 கோடியை விட, ரூபாய் 17,833.71 கோடி அதிகமாகும். இது கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஒதுக்கீட்டினை விட 124
விழுக்காடு அதிகமாகும். சுகாதாரத் துறையில் தமிழக அரசின் சாதனைகளுக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 489.41 கோடி மத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது. என பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து