முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் பல்கலை கட்டிடம் இடிந்து 5 பேர் பலி: 4 பேர் கைது

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

திருவாரூர் - திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டுமானப்பணியின் போது 5 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக ஆந்திர கட்டுமான நிறுவன பொது மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் அடுத்த நீல்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக நாககுடியில் வளாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

குடியிருப்பு வளாகம் 4 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, 4 வது தளத்தில் ஒரு முனையில் இருந்த சிமெண்ட் பில்லரின் ஒரு பகுதி மட்டும் முறிந்து சென்ட்ரிங் பணி நடந்து கொண்டிருந்த 3 வது தளத்தில் விழுந்தது. இதில் 3 வது, 2வது மற்றும் முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகை, கம்பிகள் சரிந்து அடுத்தடுத்து விழுந்தது.

இதில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்த 21 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். கட்டுமான தொழிலாளர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த சின்னசாமி (26), ஒடிசாவை சேர்ந்த கிட்டு (26), சமீர்குமார் (26), உ.பியை சேர்ந்த ராம்சுபாஹக் (18), நாகை மாவட்டம் மணல் மேடு அடுத்த பட்டவர்த்தியை சேர்ந்த குமார் (28) ஆகியோர் இறந்தனர்.
காயமடைந்த 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் 5 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த கட்டுமான பணியை ஹதராபாத் டி.இ.சி இன்பிரா ஸ்டெக்சர் என்ற நிறுவனம் கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறது.

ஹதராபாத் நிறுவனம் பொதுமேலாளர் ஆனந்த் இன்ஜினியர் அந்தோனிஅமல் பிரபு, மேஸ்திரி ஐய்யனார், மேற்பார்வையாளர் சதீஸ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மத்திய பொறியாளர் குழுவினர் நேற்று இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து