முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.5 கோடி பரிசு

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்தது.

இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 45 ஓவரில் 183 ரன்னில் சுருண்டது. எல்லியட் அதிகபட்சமாக 83 ரன் எடுத்தார். பல்க்னெர், ஜான்சன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய 33.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. கேப்டன் கிளார்க் 74 ரன்னும், சுமித் 56 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் அபாரமான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து சரண்டர் ஆனதால் இறுதி போட்டியில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் போனது. பல்க்னெர் ஆட்ட நாயகன் விருதையும்,ஸ்டார்க் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

ஆஸ்திரேலியா 5வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 1987, 1999, 2003,2007 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.5 கோடி பரிசு வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 10.85 கோடி கிடைத்தது. அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு தலா ரூ. 3.2 கோடி வழங்கப்பட்டது. கால் இறுதியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேச அணிகளுக்கு தலா ரூ. 1.86 கோடி கிடைத்தன. லீக் சுற்றில் வெற்றி பெற்ற போது பரிசு வழங்கப்பட்டு இருந்தன. லீக் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட போது பரிசு தொகை வழங்கப்பட்டு இருந்தன. இந்த உலக கோப்பையில் மொத்தம் ரூ. 63.34 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இது கடந்த உலக கோப்பையை விட 20 சதவீதம் அதிகமாகும். அடுத்த உலக கோப்பை போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் விளையாடுகின்றன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து