முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சீனா சென்றார்

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

பெய்ஜீங் - ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சீனா சென்றார். அவருடன், மாநிலத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள், நிறுவனத் தலைவர்களும் சென்றுள்ளனர். சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சீனா வுக்கு வருமாறு சமீபத்தில் அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில், சந்திரபாபு நாயுடு சீனா சென்றார். ஆந்திர மாநிலத்திற்காக புதிய தலைநகர் அமைக்கும் பணியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக சீனாவிற்கு 6 நாள் பயணமாக சென்ற சந்திரபாபு நாயுடு, அங்குள்ள தொழிலதிபர்கள், நிறுவனங்களை தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய கோரவுள்ளார்.

முதற்கட்டமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்து, சீன தொழிலதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசவுள்ளார். அதன்பின்பு, புகழ்பெற்ற பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூத்த  அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தவுள்ளார். தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம், அப்பிள், சாம்சங், ஜியோமி, டெல் ஆகிய நிறுவனங்களுக்கு முக்கிய பாகங்கலை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். சந்திரபாபுவின் சந்திப்புகள் அனைத்தையும், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஒருங்கிணைத்து, வழிநடத்தவுள்ளார்.

இது குறித்து சீனாவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகம் கூறுகையில், ஆந்திர மாநிலத்திற்கு தனி தலைநகரம் அமைக்கும் முயற்சிக்காக முதலீடு கோரி அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சீனாவுக்கு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், மாநிலத்தில், மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களில் சீன நிறுவனங்கள் மூதலீடு செய்யக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளார், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து