முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமை மீறல்களில் உ.பி.க்குத்தான் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.18-
இந்தியாவிலேயே மனித உரிமை மீறல் குற்றங்கள் நடப்பதில் உத்தரபிரேதசம் முதலிடம் வகிக்கிறது. அங்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை, தெலுங்கானாவில் சிமி தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 5 முஸ்லீம் இளைஞர்கள் சுட்டுக்கொலை ஆகிய சம்பவங்களால் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளன. அதே நேரத்தில் காவல்துறையினரால் அதிக அளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறும் மாநிலம் என்ற முதல் இடத்தை உத்தரபிரதேசம் பிடித்துள்ளது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தவிர, மனித உரிமை மீறல் சம்பவங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 200 புகார்கள் காவல்துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் உத்தரபிரதேசத்திலோ இது போன்ற புகார்கள் ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரத்தை, தாண்டும் என்கின்றன புள்ளிவிவரங்கள்.


இந்த அவல பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்திருப்பது அரியானா மற்றும் டெல்லி ஆகியவையாகும். அரியானாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2000 மனித உரிமை மீறல் புகார்களும், டெல்லியில் 2800 புகார்களும் பதிவு செய்யப்படுகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு ஆயுத படையினர் மீது தொடர்ந்து இது போன்ற புகார்கள் எப்போதும் இருந்து வருகின்றன. ஆனாலும் அங்கு புகார்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன.


பெரும்பாலான மாநிலங்களில் காவல்துறையினருக்கு எதிரான மனித உரிமை மீறல் புகார்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை கொண்டு ஆய்வு நடத்தியதில் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களின் தான் அதிகம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2014-15 ம் ஆண்டில் ஆந்திராவில் போலீசாருக்கு எதிராக 204 மனித உரிமை மீறல் புகார்களும், தெலுங்கானாவில் 117 புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து