முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோயிலுக்கு ரணில் வருகை

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஏப்.18-
கொழும்பு பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு இன்று வருகிறார். இலங்கையில் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழர்கள் விவகாரத்தில் மைத்ரிபால சிறிசேன அரசு பல்வேறு முன்னகர்வுகளையும் மேற்கொண்டு வரும் வேளையில் தனியார் டிவிக்கு பேட்டி அளித்த ரணில் அப்போது கூறுகையில்,  எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கிடையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தற்போது கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வருகை தர உள்ளார். இது குறித்து குருவாயூர் கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இன்று உச்சிகால பூஜை முடிந்ததும், இலங்கை பிரதமர் ரணிலும், அவரது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ய வருகின்றன.


ஏற்கெனவே இலங்கையின் பொது தேர்தலுக்கு முன்பு ரணில் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். தற்போது பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இங்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருவாயூர் கோயில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து