முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

குருவாயூர்,ஏப்19

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரம சிங்கே குருவாயூர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம்  செய்தார்.அவருடன் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும்இலங்கை மறு குடியமர்வு மற்றும் இந்து அற நிலையத் துறை அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் உடன் வந்தனர்.

இலங்கை பிரதமர் காலை 11.15மணிக்கு குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஶ்ரீவல்சம் விருந்தினர் விடுதிக்கு வந்தார். அங்கு அவர் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்து கொண்டார். அவரை குருவாயூர் தேவஸ்தான தலைவர் டி.வி.சந்திர மோகன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

இலங்கை பிரதமர் குருவாயூர் கோவிலில் உள்ள பஞ்சலோக சிலை உள்ள கருவறைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ரணில் விக்ரமசிங்கே தனது உடல் எடை அளவிற்கு சந்தன கட்டைகளை அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு துலாபாரம் என்று பெயர்.
இலங்கை பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் குருவாயூர் கோவிலின் தலைமை குருக்கள் மூர்கண்ணுார் ஶ்ரீஹரி நம் பூதிரி பிரசாதம் அளித்தார்.

பின்னர் தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் இலங்கை பிரதமருக்கு முரால் ஓவியத்தில் வரையப்பட்ட கிருஷ்ணர் படத்தை அளித்தார்.

இதன் பின்னர் ரணில் விக்ரம சிங்கே குருவாயூரில் உள்ள மம்மியூர் கோவிலிலும் வழிபாடு செய்தார். கோவில் வழிபாட்டிற்கு பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தற்போதைய இலங்கை அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படும். எங்களது அரசு இந்தியாசார்பாகவோ அல்லது சீனா சார்பாகவோ இருக்காது. இந்தியாவுடன் நல்ல  உறவை மேற்கொள்ள இலங்கை விரும்புகிறது. கேரளாவில் குருவாயூர் தேவஸ்தான யானைகள் சரணாலயம் புன்னத்துார் கோட்டாவில் இருக்கிறது. இந்த சரணாலயத்தை பார்வையிட இலங்கையில் இருந்து ஒரு நிபுணர்கள் குழு விரைவில் வந்து பார்வையிடும் என்றார்.
பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மதியம்12.30மணி அளவில் குருவாயூரில் இருந்து புறப்பட்டார். அவரது பாதுகாப்புக்காக குருவாயூரில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து