முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை செய்த தேனி மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தற்கொலை செய்த தேனி மாவட்டம் பெரியகுளம் பாசறை நிர்வாகி குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 3லட்சம் நிதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அதிமுக தொண்டர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது வேதனையளிப்பதாகவும் இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தாமதமானதால் மனம் உடைந்த தேனி இளைஞர் பாசறை செயலாளர்  ராஜயோக்கியம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது மனைவியும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வேதனையடைந்துள்ளார்.
இது குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :

என் மீது கொண்ட பேரன்பின் காரணமாக, தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், வடபுதுபட்டி கூட்டுறவு வேளாண்மை வங்கியின் தலைவருமான ராஜயோக்கியம் விஷம் அருந்தியதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், தனது கணவர் ராஜயோக்கியம் விஷம் உட்கொண்ட தகவலை அறிந்த அவருடைய மனைவி முத்துலட்சுமியும் விஷம் உட்கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் நான் மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. இத்தகைய செயல்கள் எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றன. அன்புகூர்ந்து இது போன்று இனி யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் ராஜயோக்கியத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய் வழங்கப்படும். அதே போல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துலட்சுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது மருத்துவ சிகிச்சைக்காக 50,000/- ரூபாய் வழங்கப்படும்.

மேலும், மறைந்த கழக உடன்பிறப்பு திரு. ராஜயோக்கியம் அவர்களுடைய 9 வயது மகள் திவ்யாவின் கல்வி உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்து தரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து