முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் கான் கார் விபத்து வழக்கு: இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

கார் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக, நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் மும்பை கோர்ட்டில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக நீதிபதி தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனது இறுதி வாதத்தை முன்வைக்க கூடுதல் அவகாசம் தேவை என்று சல்மான் கானின் வக்கீல் கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்கவில்லை. திங்கள்கிழமை(இன்று) நான் தீர்ப்பு தேதியை அறிவிக்கவுள்ளேன். அதற்குள் வாதத்தை முடியுங்கள் என்று கூறி விட்டார்.

கடந்த 2002ம் ஆண்டு பந்த்ரா பகுதியில் நள்ளிரவில் படு வேகமாக வந்த சல்மான் கானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சல்மான் கான் மீது வழக்குத் தொடரப்பட்டது. விபத்து நடந்த சமயம், சல்மான் நல்ல குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 27 சாட்சிகளை அரசுத் தரப்பு விசாரித்துள்ளது. சல்மான் கான் தரப்பில் அவரது கார் டிரைவர் அசோக் சிங் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து