முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 தமிழர்கள் கொலை - 10 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல்: தேசிய பழங்குடியினர் ஆணையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து அடுத்த 10 நாட்களில் தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதன் துணைத்தலைவர் ரவி தாகூர் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7ம் தேதி 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர அதிரடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 13 பேர் பழங்குடி இனத்தவர்கள் என் பதால், இதுகுறித்து தேசிய பழங் குடியினர் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தாகூர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. சேஷாசலம் வனப்பகுதிக்கு சென்ற விசாரணை குழுவினர் என்கவுன்ட்டர் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

அவர்கள் நடத்திய ஆய்வுக்குப் பிறகு, உடன் வந்த சித்தூர் மாவட்ட அதிகாரிகளிடம் ரவி தாகூர் சரமாரியாக கேள்விகள் கேட்டார்.
இந்த ஆய்வின்போது, என் கவுன்ட்டருக்கு தலைமை தாங்கிய அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் வரவில்லை. இதற்கு ரவி தாகூர், காந்தாராவ் ஏன் வரவில்லை என கோபமாகக் கேட்டார். இவர் கேட்ட சில கேள்விகளுக்கு அதிகாரிகள் எங்களுக்குத் தெரியாது என பதிலளித்தனர். அதற்கு உங்களுக்கு சுட மட்டும்தான் தெரியுமா? என தாகூர் எதிர் கேள்வி கேட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் ரவி தாகூர் தலைமையில் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் என்கவுன்ட்டர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் போலீசார் , வனத்துறையினர், வருவாய்த்துறையினர், தேசிய பழங்குடி ஆணைய குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,ரவி தாகூர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்கவுன்ட்டர் குறித்த முழு விசாரணை அறிக்கை அடுத்த 10 நாட்களுக்குள் தேசிய பழங் குடியினர் ஆணையத்தில் சமர்ப்பிக் கப்படும். மேலும் இந்த அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் சமர்பிக்கப்படும். அரசு விசாரணையில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து