முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, நேபாளம்,இந்தியா உள்பட 4நாடுகளில் நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த இயற்கை பேரிடரில் நேபாளத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தெற்கு ஆசியாவில் உள்ள ஏழை நாடான நேபாளத்தில் கடந்த 80ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த நில நடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்கு நடைபெறும்மீட்பு நடவடிக் கைகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.அந்த நாட்டிற்கு தேவையான  அனைத்து உதவிகளையும் அளிக்கத்தயாராக இருப்பதாக நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்தார்.இந்த நிலையில் நேபாளத்திற்கு இந்திய இயற்கைப்பேரிடர் மீட்பு அமைப்பின் 10 குழுக்கள் விரைந்தன.

நேபாளத்தில் நேற்று காலை  11.56மணிக்கு 7.8ரிக்டர் அளவில் இந்த பேரிடர் ஏற்பட்டது.இதில் அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. முதல் நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் அங்கு 6.7ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுஅதனைத்தொடர்ந்து பலமணி நேரம் நில அதிர்வுகள்  இருந்தன.

நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்கள் காத்மாண்டுவில் உள்ள பிரதான மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
நில நடுக்கம் ஏற்பட்டபோது பூமியே நகர்ந்து போவதைப்போல இருந்தது. இதில் காயம் அடைந்தவர்களில் சிலருக்கு கைகள் நொறுங்கி இருந்தன.இந்த நில நடுக்கத்தில் வீடுகள் இடிந்து தரைமட்டமாக ஆயின. அதேப்போன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களும் நொறுங்கின. இமாலய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் நேபாளத்தில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில்  எவரெஸ்ட் மலைச்சிகரத்தின்  தோற்றமே மாறும் அளவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என மூத்த மலை ஏறும் வீரர் அங் ஷெரிங் தெரிவித்தார். எவரெஸ்ட் பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.நில நடுக்கம் ஏற்பட்ட போது எவரெஸ்ட் சிகரத்தின் 5ஆயிரம் மீட்டரில்(16,500அடி) இருந்து பனிப்பாறைகள் நொறுங்கி கீழே விழுந்தன.நிலநடுக்கத்தின் போது எவரெஸ்ட் மலை மீது ஏறிக்கொண்டிருந்த டேனிஷ் நாட்டு மலை ஏறும் வீரர் கார்ஸ்டன் கடுமையாக  காயம் அடைந்தார்.அவரது 2கால்களும் உடைந்தன.

இந்த நிலநடுக்கத்தில் பனிப்பாறையில் பலர்புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது நில நடுக்கம் காத்மாண்டுவிற்கு வடமேற்கில் 80கிலோ மீட்டர் துாரத்தில் மையம் கொண்டிருந்தது.நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்கள். அப்போது இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து வந்த தூசி புகை மண்டலமாக காட்சியளித்தது.

நேபாளத்தில் 1800ம்ஆண்டில் மன்னர்கள் கட்டிய 9அடுக்கு கட்டிடமான தாரஹாரா நொறுங்கி விழுந்தது.

நில நடுக்கம் வட இந்தியாவிலும் காணப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் திபெத்தின் லாசா நகரிலும் வங்க தேசத் தலைநகர் டாக்காவிலும் நில நடுக்கம் காணப்பட்டது.நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். . இந்தியாவில் 34பேரும் திபெத்தில் 6பேரும் வங்க தேசத்தில் 2பேரும் இறந்தார்கள்.இந்திய மாநிலமான பீகாரில் 23பேர் உயிரிழந்தார்கள்.

நேபாளத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.56மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நிலநடுக்கம் 7,8ரிக்டர் அளவில் இருந்தது என அமெரிக்க புவிஆய்வு மையம் தெரிவித்தது.நேபாளத்தில் கடந்த 1934ம்ஆண்டு 8ரிக்டர் அளவில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நிலநடுக்கத்தின் போது அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு,பக்தாபூர், மற்றும் படான் நகரங்கள் பெரும் சேதம் அடைந்தன. அந்த இயற்கைப்பேரிடருக்கு பின்னர் தற்போது நேபாளம் தற்போது மிகப்பெரும் இயற்கைப்பேரிடரை தற்போது சந்தித்துள்ளது.

கடந்த 2014ம்ஆண்டு ஏப்ரல் மாதம் சிலி கடற்கரைப்பகுதியில் 8,2ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து மிகப்பெரும் நில நடுக்கமாக நேபாளத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதும் அந்த நாட்டின் பிரதமர் சுசில் கொய்ராலாவிடமும் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவிடமும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அந்த நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். நேபாள நிலநடுக்கத்தையொட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணி நேர தகவல் கட்டுப்பாட்டு அறையை அமைத்தது.
இந்தியாவிற்கான நேபாளத்து◌ாதர் தீப் குமார் உபத்யாய கூறுகையில் இந்தியாவிடம் இருந்து  மருத்துவ  வசதிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.உதவிக்கரம் நீட்டியுள்ள இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து