முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சிறுத்தைப்புலி: பீதியில் பக்தர்கள் ஓட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஸ்ரீவாரி மெட்டு மலை பாதையில் ஏராளமான பக்தர்கள் கால்நடையாக திருமலைக்கு சென்று கொண்டிருந்தனர். மதியம் 12 மணியளவில் 252வது படி அருகே சிறுத்தை புலி நின்றதை பக்தர்கள் பார்த்தனர்.

இதனால் பீதியடைந்த அவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். பலர் வந்த வழியே இறங்கி ஓடினார்கள். இதே போல் 3.30 மணிக்கு 350 படி அருகே சிறுத்தை புலி நடமாடியதை பக்தர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான ஊழியர்கள், வன அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பாதிக்கு மேல் மலை ஏறிய பக்தர்களை திருமலைக்கு அழைத்து சென்றனர். தனியாக செல்லாமல் கூட்டமாக செல்லும்படி பக்தர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர். சிறுத்தை புலி நடமாட்டத்தால் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை நேற்று முன்தினம் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியில் வன அதிகாரிகள் அதன் கால்தட பதிவை தேடினார்கள். அதற்குள் இருட்டி விட்டதால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று 2வது நாளாக சிறுத்தை புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. திருமலை வனப்பகுதியில் 30 சிறுத்தை புலிகள் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. கோடை வறட்சியால் வனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தண்ணீர் தேடி சிறுத்தைகள் வெளியே வரலாம் என்றும் வன அதிகாரிகள் கூறினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து