முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெம்மேலியில் பராமரிப்பு பணிகள்: குடிநீர் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு

புதன்கிழமை, 6 மே 2015      தமிழகம்

சென்னை - நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குடிநீர் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நெம்மேலியிலுள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மாதாந்திர முழு நாள் மின் தடை மற்றும் சில முக்கியமான பராமரிப்பு பணிகள் 07.05.2015 காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லுhர், ஈ.சி.ஆர், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் குடிநீர் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் கீழ்கண்ட பகுதிப் பொறியாளர்களின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பகுதிப்பொறியாளர்-13–கைபேசி எண். 81449 30913 (அடையார், வேளச்சேரி. பெசன்ட் நகர். திருவான்மியூர்), பகுதிப்பொறியாளர்-14-கைபேசி எண். 81449 30914 (கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி), பகுதிப்பொறியாளர்-15-கைபேசி எண். 81449 30915 ( ஈ.சி.ஆர், நீலாங்கரை, சோழிங்கநல்லூர்)" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து