முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவப்பு

சனிக்கிழமை, 9 மே 2015      சினிமா
Image Unavailable

முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா எண்டர்டைன்மெண்ட் மற்றும் புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து

வழங்க கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”. சத்யசிவா இயக்கி வரும் இப்படத்தில்
நடிகர் ராஜ்கிரன் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோனார் என்ற வேடத்தில் நடிக்கிறார்.

நாயகனாக நவீன்சந்திராவும், நாயகியாக ரூபா மஞ்சரியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமைய்யா, செல்வா, போஸ்வெங்கட்,
வெங்கடேஷ், அல்வாவாசு, பூ ராம், சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். ”இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை பதிவு தான் இந்த  படத்தின் கதை. இதில் அழகிய காதல் இருக்கு, அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கு. படம் பார்க்கிறவர்களின் மனதை உலுக்கி விடும் அளவிற்கு  உருவாகியுள்ள சிவப்பு மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது” என்கிறார் இயக்குனர் சத்யசிவா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து