முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ராய்ப்பூர்: ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.  முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 46 பந்தில் 74 ரன் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். நாதன் கோல்ட்டர் 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ், ஜாகீர்கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையீடிய டெல்லி டேர்டெவிலிஸ் 20 ஓவனரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. பரபரப்பான இநஅத ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ் 34 பந்தில் 63 ரன்னும், குயின்டன் டி காக் 31 பந்தில் 50 ரன்னும் எடுத்தனர். கேவி.சர்மா 2 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார், பர்வேஸ் ரசூல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியதாவது: இந்த ஆடுகளத்தில் 150 முதல் 160 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். ஹென்ரிக்ஸ் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. புவனேஸ்வர்குமார், கரண்சர்மா நன்றாக வீசினார்கள். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. துரதிருஷ்டவசமாக ஸ்டெய்ன் போல்ட் இந்த போட்டியில் ஆட முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார். தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் டுமினி கூறியதாவது: 164 ரன் எடுக்க கூடிய இலக்கே. புவனேஸ்வர்குமார் அபாரமாக பந்து வீசி ஆட்டத்தை மாற்றி விட்டார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து