முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      விளையாட்டு
India-New-Zealand-match

சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.

3 போட்டிகள்... 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது எதிர்வரும் இன்று இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முக்கிய மைல்கல்...

இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 26 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை பூர்த்தி செய்வார். இதன் மூலம் அதிவேகமாக 3,000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார்.

2974 ரன்கள் குவிப்பு...

ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 69 இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 23 அரைசதம் என 2974 ரன்களை குவித்துள்ளார். 1.ஷிகர் தவான்: 72 இன்னிங்ஸ்கள், 2. விராட் கோலி: 75 இன்னிங்ஸ்கள், 3. கே.எல். ராகுல்: 78 இன்னிங்ஸ்கள்.

BOX - 1

விராட் கோலி சாமி தரிசனம் 

இதற்கிடையே இந்தூர் சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலை இந்திய அணி வீரரான விராட் கோலி உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து