எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
4 குழுக்களாக...
19 வயதுக்குள்பட்டோருக்கான ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் நான்கு அணிகள் வீதம் நான்கு குழுக்களாக 16 அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
பந்துவீச்சு தேர்வு...
முதல் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறையில் அமெரிக்காவை வென்ற இந்திய அணி நேற்று (ஜன.17) ஜிம்பாப்வேயின் புலவாயோ கிரிக்கெட் திடலில் நடைபெறும் தொடரின் 7-வது போட்டியில் வங்கதேச அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
கைகுலுக்க மறுப்பு...
இந்தப் போட்டியில் காசு சுண்டுதலில் வெற்றிபெற்ற வங்கதேச கேப்டன் அப்ரார், இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிடம் கைகுலுக்க நெருங்கி வந்த போது, ஆயுஷ் அவரை கண்டுகொள்ளாமல் கைகுலுக்க மறுத்துவிட்டார். பின்னர், இரு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்ட பின்னரும், இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதை மறுத்துவிட்டனர்.
சிறுபான்மையினர்...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஹிந்து தொழிலதிபர், பத்திரிகையாசிரியர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
ரஹ்மான் விடுவிப்பு...
இருதரப்பிலும் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்திருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை, அணியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியதால், அவர் அணியில் இருந்து ஜன. 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இலங்கைக்கு மாற்ற...
இதன் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப அங்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் எனக் கூறி, பாகிஸ்தான் அணியைப் போன்றே வங்கதேசத்துக்கான போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட விவகாரமும் பெரிய பேசுபொருளானது. முன்னதாக, கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பயங்கரவாத - ராணுவ சண்டை ஆசியக் கோப்பை வரை எதிரொலித்தது. இந்த இரு தொடர்களிலும் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் கைகுலுக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


