முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கப்பிரிவு வழக்கு: சசிகலா–தினகரன் விடுவிப்பு

திங்கட்கிழமை, 18 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை அமலாக்கப்பிரிவு கடந்த 1997–ம் ஆண்டு சசிகலா, தினகரன் ஆகிய இருவர் மீதும் அன்னிய செலவானி மோசடி வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 7 வழக்குகள் அவர்கள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டது. அன்றைய ஜெயா.டி.வி. நிறுவனத்துக்கு பணம் பரிவர்த்தனை செய்தது தொடர்பாகவும், ஆவணம் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்ததாகவும் சசிகலா மீதும், தினகரன் மீதும் அமலாக்கப்பிரிவு குற்றம் சுமத்தி இருந்தது.

இந்த 7 வழக்குகளில் 5 வழக்குகள் எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.மீதமுள்ள 2 வழக்குகளும் எழும்பூரில் உள்ள 2–வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த 7 வழக்குகளையும் நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்து வந்தார்.இந்த நிலையில் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா மனு செய்து இருந்தார்.

அதுபோல 2–வது நீதிமன்றத்தில் உள்ள 2 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் மனு செய்து இருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுநடந்தது. அப்போது ஒரு வழக்கில் இருந்து சசிகலாவையும், 2 வழக்குகளில் இருந்து தினகரனையும் விடுவித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து