முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 11போலீசாருக்கு ஒரு ஆண்டு ஜெயில்: ஆப்கன் நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரு அப்பாவி பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 11 போலீசாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் அளித்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதியன்று 27வயது பெண் பர்குந்தாவை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி கொலை செய்தது. அந்த பெண் புனித நு◌ாலான குரானை கிழித்ததாக குற்றம் சாட்டி அந்த கும்பல் கடுமையாக தாக்கி கொலை செய்தது. கும்பல் தாக்கிய போது அந்த பெண்ணை காப்பாற்றாமல் போலீசார் வேடிக் கை பார்த்தனர் என்று ஆப்கானிஸ்தானிலும் உலகம் முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்த பெண் கொலை தொடர்பாகஆப்கானிஸ்தானின் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது போலீசார் உள்பட 49பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பர்குந்தா குரானை அவமதிக்கும் விதத்தில் செயல்படவில்லை .அவர் நிரபராதி என விசாரணையின் போது சாட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. பர்குந்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4பேருக்கு மரண தண்டனை மற்றும் 8ஆண்டு முதல் 16ஆண்டு வரை ஜெயில் தண்டனை என ஆப்கன் நீதிமன்றம் இந்த மாத துவக்கத்தில் தீர்ப்பு அளித்தது.

பர்குந்தா ஒரு கும்பலால் தாக்கப்பட்ட கொடூர நிகழ்வினை அந்த வழியாக சென்றவர்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர்.அப்போது போலீசார் எந்த வித நடவடிக் கை எடுக்காமல் வேடிகை பார்த்தனர். இந்த  நிகழ்ச்சி மொபைல் போனில் பதிவான காட்சிகளில் தெரிய வந்தது. இதனால் போலீசார் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இதர நபர்களுக்கும் நீதிமன்றம் தண்டனை அளித்தது.குற்றம் சாட்டப்பட்ட 18பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. 11போலீசார் மீது குற்றச்சாட்டு உறுதியானதால் அவர்களுக்கு 1ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து