Idhayam Matrimony

அசாமில் ரயில் கவிழ்ந்தது: பயணிகள் காயம்

சனிக்கிழமை, 23 மே 2015      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது பலர் காயம் அடைந்தனர். அசாம் மாநில கவுகாத்தியில் இருந்து சிபுங்க் நகருக்கு நேற்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கோக்ராஜ்கர் என்ற இடத்தில் சென்ற போது திடீர் என்று ரயில் தடம் புரண்டது. இதனால் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று பயங்கர சத்தத்துடன் மோதி  தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. என்ஜினும் 5 பெட்டிகளும் கவிழ்ந்து சேதம் அடைந்தது. அப்போது ரயிலில் இருந்து பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். என்ஜின் டிரைவரும் காயம் அடைந்தார்.

தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து சென்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் டிரைவர் உள்பட காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து