முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டிவலுத்துள்ளது

திங்கட்கிழமை, 25 மே 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி வலுத்துள்ளது என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்களை ஒபாமா அரசு வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.இதில் 3வது முறையாக தற்போதைய ஜனாதிபதி ஒபாமா போட்டியிட முடியாத நிலை இருக்கிறது.இதனால் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.

எனவே ஹிலாரி தீவிரமாக ஆதரவு திரட்டும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஹிலாரி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது சர்வதேச நாடுகளுடன் பரிமாறிகொண்ட 296 மின்னஞ்சல்களை ஒபாமா அரசு வெளியிட்டிருக்கிறது.கடந்த 2012ம்ஆண்டு லிபியா மற்றும் பெங்காசி ஆகிய நாடுகளில் நடைபெற்ற போருக்கு பின்னர் பரிமாறிகொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் ஆகும்.

அந்த தருணத்தில் லிபியாவில் உள்ள அமெரிக்க துாதரகம் தாக்கப்பட்டது. அதில் துாதர் உள்ளிட்ட 4அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. இந்த மின்னஞ்சல்கள் ஹிலாரிக்கு பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்டாலும் இது குறித்து ஹிலாரி தரப்பினர் கூறுகையில் இந்த மின்னஞ்சல்களை வெளியிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியே என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து