முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கனமழைக்கு 15 பேர் பலி

வியாழக்கிழமை, 28 மே 2015      உலகம்
Image Unavailable

டெக்சாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 15 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றும் பலமாக வீசுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்,12 பேரை காணவில்லை.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பார்கர் பகுதியில் உள்ள பிரசேஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் டல்லாஸ் அருகேயுள்ள அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கனமழையால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்பு குழு வினர் மீட்டு வருகின்றனர். கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே மின்சாரம், தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்ப்டடுள்ளது. சாலைகள் சேதமடைந்ததால் போக்குவர்தது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்கள் முதல் ஹுஸ்டன், ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. டல்லாஸ், ஹுஸ்டன் ஆகிய இடங்களில் 240 விமானங்கல் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து