முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.இது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.  

வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கடந்த 11 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா  கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார்.  சென்னை ஆர்.கே. நகர் தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17-ம் தேதி ராஜினாமா செய்தார். வெற்றிவேலின் ராஜினாமாவையடுத்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தொகுதியில் ஜுன் மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த  முடிவின்படி, 27.6.2015 அன்று நடைபெற உள்ள (11) டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்  சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜெயலலிதா ( கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் )நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறயுள்ளார்.

கடந்த 23–ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி  ஏற்றுக் கொண்டார்கள். ஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் கடந்த 17–ந்தேதி அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார். அவர் அதனை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து தேர்தல் கமிஷன் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் மாதம் (அடுத்த மாதம்) 27–ந்தேதி இடைத்தேர்தல்  நடைபெறும் என்று அறிவித்தது. அந்த தொகுதியில், வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 3-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
மனுக்கள் பரிசீலனை 11-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.

மனுக்களை வாபஸ் பெற 13-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 27-ந்தேதி (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் பணிகள் அனைத்தும் ஜூலை 2-ந்தேதியுடன் நிறைவடைகின்றன என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு யந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. அண்ணா தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியில் திருச்சி, ஸ்ரீரங்கம், சங்கரன் கோவில், ஏற்காடு, ஆலந்தூர், புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த 6 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. இதே போன்று கூட்டுறவு சங்க தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. ஓராண்டுக்கு முன்பு பார்லிமெண்ட் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா தி.மு.க. 37 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்தது. அது மட்டுமல்ல அகில இந்திய அளவில் அண்ணா தி.மு.க. 3–வது இடத்தை பிடித்தது.

ஜெயலலிதாவின் சாதனைகள், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, பாசம், அன்பு காரணமாக வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது. எப்படியாவது ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கங்கணம் கட்டின. ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவரது வெற்றியையும் தடை செய்ய முடியவில்லை. நாளுக்கு நாள் ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறோம் என்று கூறி அனைத்து கட்சி தலைவர்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  சந்தித்தார்.

பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளை  டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்தித்தார். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு, கூட வந்த கட்சி தலைவர்களை முகம் சுழிக்க வைத்தார். மு.க. ஸ்டாலின் தனது பங்குக்கு தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை கொடுக்கும் சாக்கில் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்தார். பேட்டி கொடுத்தார். இத்தனை நாடகங்கள் நடந்தன.
வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 5–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துவருவதை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்தியது. இனி ஜெயலலிதாவின் செல்வாக்கை குறைக்க முடியாது. அவரை வெல்ல முடியாது. இப்போது தேர்தலில் போட்டியிட்டு மோசமான நிலைமைக்கு போவதைவிட தேர்தலில் போட்டியிடாமல் கவுரவமாக ஒதுங்கி கொள்வோம் என்று தி.மு.க. ஒதுங்கிவிட்டது. மற்ற கட்சிகளும் போட்டியிட தயக்கம் காட்டுகின்றன. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட்  கிடைக்காத நிலைதான் ஏற்படும். எனவே வீணாக பலப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என நினைக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து