முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது உறுதி: சரத்குமார் பேட்டி

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

நெல்லை: நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் தலைமையில் இன்னொரு அணியும் நிற்கிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி நிதி அளிப்பு விழாவுக்கு சென்ற சரத்குமார் அ்ஹகு நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பலமுறை பேசி முடிவெடுத்த பின்னரே தனியாருக்கு ஒப்பந்தம் போட்டு கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி மாதத்துக்கு ரூ.24 லட்சம் நடிக்ர சங்கத்துக்கு வருமானமாக கிடைக்கும். பராமரிப்பு செலவு, பாதுகாப்பு செலவு, மின்சார செலவு எதுவும் சங்கத்தைச் சேர்ந்ததது அல்ல. மொத்தம் உள்ள 68 ஆயிரம் சதுர அடியில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடி வரையில் நடிகர் சங்கத்துக்கு கேட்டு உள்ளோம். மீண்டும் நடிகர் சங்கம் கடன்பட்டு விடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்.

நடிகரை சங்கத்திற்கு நாங்கள் பொறு்புக்கு வரும்போது சங்கம் கடனில் இருந்தது. அதை அடைத்து உள்ளோம். சங்க கட்டிடம் கட்டுவது குறித்து ஒப்பந்தம் குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் பேசப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தால் சங்கத்திற்கு வருமானம்தான் வரும். இந்த ஒப்பந்தம் குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை. 2013ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் நேற்று குற்றம் சாட்டுகிறவர்கள் சிறந்த தலைமை என்று பாராட்டி பேசினார்கள். நான் கடந்த முறையே பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்றேன். அப்போது அவர்கள் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்கள்.

இப்போது கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் போவேன் என்று கூறி இருக்கிறேன். ஏற்கெனவே செயற்குழுவில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். எங்கள் மீது சாட்டுக்கின்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று வரட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. நடிகர்களஇடம் ஒற்றுமை வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட்டு ஓடுவதற்கு நாங்கள் கோழயல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து